தமிழ் சூரிய நாட்காட்டி

தமிழ் நாட்காட்டி

வணக்கம். வாழ்க வையகம்... வாழ்க தமிழ்...

சூரியன் நகர்வு - மாதம் பிறப்பு

தமிழ் மாதங்கள் சூரியன் நகர்வை வைத்து கணக்கிடப்படுகிறது.

பூமத்தியரேகையும் (Equator), சூரிய கிரகண வழி ( Sun Ecliptic) பாதையும் சேரும் புள்ளி 0°00'01" பாகையில் சூரியன் வரும் நாள் சித்திரை மாதம் முதல் நாள். இந்த நாள் மார்ச் மாதம் 20.3.2024 அன்று வருகிறது. நாம் பயன்படுத்தும் தற்போது உள்ள நாள்காட்டி 25 நாட்கள் தாமதமாக உள்ளது. இப்படி ஒவ்வொரு மாதமும் 25 நாட்கள் தாமதமாக உள்ளது. இது நிராயன முறை எனப்படும். நான் வானில் உள்ள சூரியனின் நகர்வை வைத்து சாயன முறைப்படி சூரிய நாட்காட்டியை கணித்து உள்ளேன்.

  • 30°00'01" பாகையில் சூரியன் வரும் நாள் வைகாசி மாதம் முதல் நாள்.
  • 60°00'01" பாகையில் சூரியன் வரும் நாள் ஆனி மாதம் முதல் நாள்.
  • 90°00'01" பாகையில் சூரியன் வரும் நாள் ஆடி மாதம் முதல் நாள்.
  • 120°00'01" பாகையில் சூரியன் வரும் நாள் ஆவணி மாதம் முதல் நாள்.
  • 150°00'01" பாகையில் சூரியன் வரும் நாள் புரட்டாசி மாதம் முதல் நாள்.
  • 180°00'01" பாகையில் சூரியன் வரும் நாள் ஐப்பசி மாதம் முதல் நாள்.
  • 210°00'01" பாகையில் சூரியன் வரும் நாள் கார்த்திகை மாதம் முதல் நாள்.
  • 240°00'01" பாகையில் சூரியன் வரும் நாள் மார்கழி மாதம் முதல் நாள்.
  • 270°00'01" பாகையில் சூரியன் வரும் நாள் தை மாதம் முதல் நாள்.
  • 300°00'01" பாகையில் சூரியன் வரும் நாள் மாசி மாதம் முதல் நாள்.
  • 330°00'01" பாகையில் சூரியன் வரும் நாள் பங்குனி மாதம் முதல் நாள்.

அதன்படி 30°00'00" பாகைகள் ஒரு மாதம் என்ற தமிழ் மாத கணக்கு சூரியன் நகர்வு படி சரியாக அமைகிறது.

கணித்தவர்: இரா. செந்தில்குமார் எம்.எ. தமிழ்.,

இடம்: குன்னூர்.

மின்னஞ்சல்: tamilsuncalendar@gmail.com

அட்சரேகை: வ 11° 35' 17.46"

தீர்க்கரேகை: கி 77° 19' 21.20"

உயரம்: 1768 மீ.

நன்றி...வணக்கம். வாழ்க வையகம்... வாழ்க தமிழ்...

;